Posts

Showing posts with the label Savings

RCH ID Registration கர்ப்பிணி பெண்கள் முதல்ல இதைத்தான் செய்ய வேண்டும்

Image
              இந்தப் பதிவை உங்கள் வீட்டில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு தெரியப்படுத்துங்கள். கர்ப்பிணி பெண்கள் அனைவரும் மூன்று மாதத்திற்குள் RCH ID என்ற ஒரு ID கிரியேட் செய்ய வேண்டும். RCH ID Reproductive and Child Health RCH ID என்பது தனிநபருக்கு ஆதார் அட்டை எவ்வாறு உள்ளது அதுபோல கர்ப்பிணிகளுக்கு RCH ID Number என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எதற்கு RCH ID கிரியேட் செய்ய வேண்டும்?      நமது தமிழக அரசு கர்ப்பிணி பெண்களின் நிலையை குறித்து அறிவதற்காகவே இந்த RCH ID துவங்கி உள்ளனர்.அரசு மருத்துவமனையிலோ அல்லது தனியார் மருத்துவமனையிலோ கர்ப்பிணி பெண்கள் தங்கள் நிலையை காண்பித்தாலும் இந்த RCH ID என்பது மிகவும் கட்டாயமான ஒன்றாகும்.இதன் பலன்கள் குழந்தை பிறப்பிற்கு பின்பு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் எளிதில் பெற முடியும் RCH ID இருந்தால் மட்டும் போதும். அதுமட்டுமல்ல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். RCH ID Create செய்வதற்கு தேவையான...

FINANCIAL RULE 50/30/20 என்றால் என்ன?

Image
FINANCIAL RULE   50/30/20 என்றால் என்ன? நாம் பணத்தை இந்த முறையில் தான்  கையால வேண்டும். 50% NEEDS:             நம்முடைய மாத வருமானத்தில் 50 சதவீதத்தை மட்டும் வீட்டு வாடகை, மின்சாரம் ,கேஸ் பில், Mobile ரீசார்ஜ், கேபிள் ரீசார்ஜ் இதுபோன்று நமது இன்றியமையாத தேவைகளுக்கு பயன்படுத்தும் முறை ஆகும்.நமது தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அவற்றை பயன்படுத்த வேண்டும். 30% WANTS:             நம்முடைய மாத வருமானத்தில் 30 சதவீதத்தை மட்டும்  நம்முடைய பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தும் முறை. திரையரங்குக்கு செல்வது பூங்காவிற்கு செல்வது நமக்கு தேவை இல்லை என்று தெரிந்தும் நாம் செய்யும் செலவுகளை 30 சதவீதம் மட்டுமே செய்ய வேண்டும் அதற்கு மேல் செய்யக்கூடாது. 20% SAVINGS:           நமது மாத வருமானத்தில் 20% ஆவது சேமிக்க வேண்டும்.  இந்தியாவில் பல்வேறு நடுத்தர குடும்பங்கள் செலவினங்களை அதிகமாக செய்யும் ஆனால் சேமிப்பு என்பது கிடையாது.அவர்கள் அவர்களது மாத வருமானத்தில் 20% சேமிக்க வேண்டும். எவ்வாறு ...

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY)

Image
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) 18 முதல் 70 வயதிற்குட்பட்டவர்கள், வங்கிக் கணக்குடன் இணைந்து, மே 31 அல்லது அதற்கு முன், ஜூன் 1 முதல் மே 31 வரையிலான கவரேஜ் காலத்திற்கான வருடாந்திர புதுப்பித்தல் அடிப்படையில் தானாக டெபிட் செய்ய ஒப்புதல் அளித்தால், இந்தத் திட்டம் கிடைக்கும். வங்கிக் கணக்கிற்கான முதன்மை KYC ஆக ஆதார் இருக்கும். இத்திட்டத்தின் கீழ் ஆபத்து கவரேஜ் ரூ.2 லட்சம் விபத்து மரணம் மற்றும் முழு ஊனம் மற்றும் ரூ. பகுதி ஊனமுற்றவர்களுக்கு 1 லட்சம். பிரீமியம் ரூ. ஆண்டுக்கு 20 ரூபாய் கணக்கு வைத்திருப்பவரின் வங்கிக் கணக்கில் இருந்து 'ஆட்டோ-டெபிட்' வசதி மூலம் ஒரே தவணையில் கழிக்கப்படும். பொதுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது பிற பொதுக் காப்பீட்டு நிறுவனங்களால் இந்தத் திட்டம் வழங்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட, PMSBY திட்டம் பிரீமியத்தில் கணிசமான காப்பீட்டுத் தொகையை அதன் பயனாளர்களுக்கு வழங்குகிறது. வெறும் ரூ.20 பிரீமியத்துடன், கணக்கு வைத்திருப்பவர் ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகையைப் பெறலாம் என்பதுதான் இதன் தனிச்சிறப்பாகும். இந்த இ...

காப்பீட்டு திட்டம் - ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY)

Image
காப்பீட்டு திட்டம் - ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கும் உதவும் நோக்கத்தில் மத்திய அரசு இந்தத் திட்டத்தை கொண்டுவந்தது. 2015ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். மத்திய அரசின் இந்த காப்பீட்டு திட்டம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கக் கூடியதாகும். முதலில் ஒரு ஆண்டுக்கு மட்டுமே இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கும். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கப்படும். பாலிசி காலத்திலேயே பாலிசிதாரருக்கு ஏதாவது நடந்துவிட்டால் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரையில் காப்பீடு கிடைக்கும். யாருக்கெல்லாம் கிடைக்கும்? 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் இணையலாம். வங்கியில் சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும். வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைத்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தின் பலன் கிடைக்கும். அதிகபட்சம் 55 வயதில் இத்திட்டம் முதிர்வடைந்து விடும். இத்திட்டத்துக்கான பிரீமியம் தொகை ரூ.436 கிளைம் செய்வத...

முதலீடு மற்றும் சேமிப்பு செய்வதற்கு முன்பு செய்ய வேண்டியவை

Image
முதலீடு மற்றும் சேமிப்பு செய்வதற்கு முன்பு செய்ய வேண்டியவை 1)வட்டி கட்டும் கடனாளியாக இருக்கக் கூடாது. 2)மருத்துவ மட்டும் ஆயுள் காப்பீடு நமக்கும் நமது குடும்பத்திற்கும் இருக்க வேண்டும். 3)அவசரத்திற்கு தேவைப்படும் ஒரு தொகை நம்மிடம் இருக்க வேண்டும். (ஆறு மாத வருமான தொகை நம்மிடம் இருக்க வேண்டும்) இது அனைத்தும் செய்தால் மட்டுமே நமது சேமிப்பு மற்றும் முதலீடு நமக்கு உபயோகமாக இருக்கும் இல்லையென்றால் மேலே கூறியுள்ள  அவற்றால் ஏற்படும் செலவுகளை தீர்க்கவே சரியாக இருக்கும்.

நிலையான வைப்பு தொகை (Fixed Deposit -FD)

Image
நிலையான வைப்பு தொகை என்பது பண முதலீட்டு திட்டங்களில் ஒரு வகையாகும். இத்திட்டத்தின் கிழ், வங்கி அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களில் நிதியை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு வைப்பு வைக்க வேண்டும். முதிர்வு காலம் வரை அந்த நிதியை வங்கியில் இருந்து எடுக்க முடியாது. வங்கிகளில் நிலையான வைப்பு தொகைக்கான காலத்தை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளாக நமது விருப்பதற்கு ஏற்ப தேர்வு செய்துகொள்ளலாம்.. ஒருவேளை, நிலையான வைப்புத்தொகையில் வைப்பு வைக்கப்பட்ட நிதியை முதிர்வு காலத்திற்கு முன்னரே வங்கியில் இருந்து திரும்ப பெற வேண்டுமென்றால் அதற்கு அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். முதிர்வு காலம் முடிந்த பின்னர், நாம் வைப்பு வைத்திருந்த நிதி வட்டியுடன் நமக்கு கிடைக்கும். இந்த வட்டியை நாம் முதிர்வு காலத்திற்கு முன்பே மாத மாதமும் பெற முடியும். வட்டி விகிதங்கள்: வட்டியை மாதா மாதம் பெறுவது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பெறுவது, 6 மாதங்களுக்கு ஒருமுறை பெறுவது, ஆண்டுக்கு ஒருமுறை பெறுவது மற்றும் முதிர்வு காலம் முடிந்த பின்னர் பெறுவது என நமது விருப்பதற்கு ஏற்ப தேர்வு செய்யலாம். ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் உங்கள்...

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF)

Image
தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பயனளிக்கும் விதமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு ஓய்வின் போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகை வட்டியுடன் அளிக்கப்படுகின்றன. இதற்காக தொழிலாளர்கள் அவர்கள் பணியாற்றும் காலத்தின்போது, மாதந்தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அவரது வைப்பு நிதிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. அரசு நிர்வகிக்கும் தொழிலாளர் வைப்பு நிதி: இதேபோல், குறிப்பிட்ட தொகையை தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனம் சார்பில் செலுத்தப்படுகிறது. தொழிலாளர் வைப்பு நிதியில் உள்ள பணம் அரசு சார்பில் நிர்வகிக்கப்படுகிறது. தொழிலாளர் மற்றும் நிறுவனம் செலுத்தும் தொகைக்கு அரசு சார்பில் குறிப்பிட்ட அளவு வட்டியாக பணம் செலுத்தப்படும். தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி கணக்கு தொடர்பாக 12 இலக்க எண் வழங்கப்படும். கணக்கில் எவ்வளவு நிதி சேர்ந்துள்ளது என்பதை இந்த எண்ணை பயன்படுத்தி இணையம் மூலம் அறிந்துகொள்ளலாம். ஈபிஎஃப் பெறுவதில் உள்ளநிபந்தனைகள்: ஒருவர் பணியில்...

தொடர் வைப்புத்தொகை -(RD) -நன்மைகள், அம்சங்கள்

Image
ரெக்கரிங் டெபாசிட் (RD) கணக்கு என்பது முதலீட்டாளர்கள் வழக்கமான மாதாந்திர முதலீடுகளைச் செய்வதற்கும் குறிப்பிட்ட காலத்தில் பணத்தைச் சேமிப்பதற்கும் அனுமதிக்கும் முதலீட்டு கருவியாகும். முதலீட்டாளர்கள் தங்கள் வசதியின் அடிப்படையில் வைப்புத்தொகையின் காலம் மற்றும் மாதாந்திர கட்டணத் தொகையைத் தேர்வு செய்யலாம். RD திட்டங்கள் பொதுவாக நிலையான வைப்புத் திட்டங்களை விட நெகிழ்வானவை மற்றும் பணத்தை சேமிக்கவும் மழைக்கால நிதியை உருவாக்கவும் கணக்கு தொடங்க விரும்புபவர்களால் பொதுவாக விரும்பப்படுகின்றன. தொடர் வைப்புகளின் வகைகள் வழக்கமான RD கணக்குகள்:  வழக்கமான RD கணக்கு என்பது 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இந்திய குடியிருப்பாளர்களுக்கானது. இந்தக் கணக்கு வைப்புத் தொகைக்கு நிலையான வட்டியைப் பெறுவதற்கு, கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் ஒரு முன்-குறிப்பிட்ட காலத்திற்குள் கணக்கில் வைப்பதற்கு அனுமதிக்கிறது. கணக்கின் காலத்தின் அடிப்படையில் வட்டி கணக்கிடுவதற்கு கூட்டு அல்லது நேரடியான வட்டி முறை பயன்படுத்தப்படும். சிறார்களுக்கான RD கணக்குகள்: அத்தகைய கணக்குகள் 18 வயதுக்கு...

பொது வருங்கால வைப்பு நிதி - (​PPF)

Image
பொது வருங்கால வைப்பு நிதி - (PPF) முதலீடுகளில் பலவிதம் இருந்தாலும், பாதுகாப்பான மற்றும் அதிக வட்டி வழங்கும் முதலீடுகளில் ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி என்று அழைக்கப்படும் public provident fund. பொது வருங்கால வைப்பு நிதி என்பது மத்திய அரசின் ஆதரவுடன் வரி இல்லாத சேமிப்பு சேமிப்பு திட்டம் என்பதே இதன் சிறப்பம்சம். மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை உண்டாக்கம், 1968 ஆம் ஆண்டில் நிதி அமைச்சகத்தின் மூலம், இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. சேமிப்பு பழக்கத்தை கடந்து, தனியார் பாதுகாப்பில் பணிபுரியும் மக்களுக்கு, ஓய்வூதியத்திற்கான பாதுகாப்பை வழங்கவும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், தற்போது, பொது வருங்கால வைப்பு நிதி சிறந்த வரி சேமிப்பு திட்டங்களில் ஒன்றாக கருதப்படுவத்ற்கு முக்கிய காரணம், இதின் வைப்புத்தொகைக்கு ஈட்டப்படும் வட்டி வரி விதிக்கப்படாது. இந்த முதலீட்டில் சில கவனிக்கப்பட வேண்டிய காரணிகள்: பொது வருங்கால வைப்பு நிதியின் கீழ் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 15 ஆண்டுகள் LOCK IN காலம் உண்டு. அதாவது, முதலீடு செய்யும் பணத்தை 15 ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. பொது வருங்கால...