RCH ID Registration கர்ப்பிணி பெண்கள் முதல்ல இதைத்தான் செய்ய வேண்டும்
இந்தப் பதிவை உங்கள் வீட்டில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
கர்ப்பிணி பெண்கள் அனைவரும் மூன்று மாதத்திற்குள் RCH ID என்ற ஒரு ID கிரியேட் செய்ய வேண்டும்.
RCH ID Reproductive and Child Health
RCH ID என்பது தனிநபருக்கு ஆதார் அட்டை எவ்வாறு உள்ளது அதுபோல கர்ப்பிணிகளுக்கு RCH ID Number என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
எதற்கு RCH ID கிரியேட் செய்ய வேண்டும்?
நமது தமிழக அரசு கர்ப்பிணி பெண்களின் நிலையை குறித்து அறிவதற்காகவே இந்த RCH ID துவங்கி உள்ளனர்.அரசு மருத்துவமனையிலோ அல்லது தனியார் மருத்துவமனையிலோ கர்ப்பிணி பெண்கள் தங்கள் நிலையை காண்பித்தாலும் இந்த RCH ID என்பது மிகவும் கட்டாயமான ஒன்றாகும்.இதன் பலன்கள் குழந்தை பிறப்பிற்கு பின்பு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் எளிதில் பெற முடியும் RCH ID இருந்தால் மட்டும் போதும். அதுமட்டுமல்ல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
RCH ID Create செய்வதற்கு தேவையான ஆவணங்கள்:
1.கர்ப்பிணி பெண்ணின் ஆதார் எண்
2.கணவரின் ஆதார் எண்
3.குடும்ப அட்டை
4.கர்ப்பிணி பெண்ணின் ஒரு புகைப்படம்
5.Medical report
6.Bank passbook
RCH ID சுயமாக பதிவு செய்யும் முறை:
RCH ID யை சுயமாக மொபைல் மூலம் நமக்கு நாமே கிரியேட் செய்து கொள்ள முடியும்.இது எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது தேவைப்படுபவர்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.👇
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் பலன்கள்:
கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசு மொத்தம் பதினெட்டாயிரம் ரூபாய் கொடுப்பார்கள் அதுவும் தவணை முறையில் இதில் இரண்டு ஊட்டச்சத்து பெட்டகமும் அடங்கும்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் இணைய:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து Submit கொடுக்க வேண்டும்.
ஊ ட்டச்சத்து பெட்டகம்:
ஊட்டச்சத்து பெட்டகத்தில் என்னென்ன பொருட்கள் இருக்கும் என்பதற்கான வீடியோ பதிவு link கீழே கொடுக்கப்பட்டுள்ளது தேவைப்படுபவர்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.
👇
சத்துணவு மையம்:
தமிழக அரசு மூலம் மாதம் இரண்டு பாக்கெட் சத்துமாவு அங்கன்வாடி மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.இந்த சத்துமாவே பெருவதற்கு கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் அருகில் உள்ள அங்கன்வாடிக்கு சென்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொடுத்துள்ள புக்-கை காண்பித்தால் போதும் அங்கும் கர்ப்பிணி பெண்ணின் ஆதார் எண் மற்றும் கணவரின் ஆதார் எண் கொடுக்க வேண்டும்.
Comments
Post a Comment