RCH ID Registration கர்ப்பிணி பெண்கள் முதல்ல இதைத்தான் செய்ய வேண்டும்

Image
              இந்தப் பதிவை உங்கள் வீட்டில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு தெரியப்படுத்துங்கள். கர்ப்பிணி பெண்கள் அனைவரும் மூன்று மாதத்திற்குள் RCH ID என்ற ஒரு ID கிரியேட் செய்ய வேண்டும். RCH ID Reproductive and Child Health RCH ID என்பது தனிநபருக்கு ஆதார் அட்டை எவ்வாறு உள்ளது அதுபோல கர்ப்பிணிகளுக்கு RCH ID Number என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எதற்கு RCH ID கிரியேட் செய்ய வேண்டும்?      நமது தமிழக அரசு கர்ப்பிணி பெண்களின் நிலையை குறித்து அறிவதற்காகவே இந்த RCH ID துவங்கி உள்ளனர்.அரசு மருத்துவமனையிலோ அல்லது தனியார் மருத்துவமனையிலோ கர்ப்பிணி பெண்கள் தங்கள் நிலையை காண்பித்தாலும் இந்த RCH ID என்பது மிகவும் கட்டாயமான ஒன்றாகும்.இதன் பலன்கள் குழந்தை பிறப்பிற்கு பின்பு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் எளிதில் பெற முடியும் RCH ID இருந்தால் மட்டும் போதும். அதுமட்டுமல்ல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். RCH ID Create செய்வதற்கு தேவையான...

வேகமாக முடிவெடு வெற்றியை கொண்டாடு...

          
           முடிவுகளை வேகமாக எடுக்க வேண்டும் ஏனென்றால் அது உன் நிலையை மாற்றும்....
எந்த ஒரு விஷயம் செய்வதற்கு முன்பும் யோசனை செய்ய வேண்டும் ஆனால் நம்மில் பலர் யோசனை மட்டும் தான் செய்து கொண்டு இருப்போம்.முடிவை எடுக்கத்  தயங்குவோம் ஏனென்றால் பலருக்கு பல பிரச்சினைகள் இருக்கும் பணம் அந்தஸ்து நேரம் இதுபோன்று பல பல பிரச்சினைகள்.

உதாரணமாக:
           சிலருக்கு பணம் அவர்களிடம் இருக்கும் ஆனால் தொழில் தொடங்குவதற்கு யோசித்துக் கொண்டே இருப்பார்கள்.அதுதான் தவறு என்று கூறுகிறேன். பணம் இல்லாதவன் எப்படி பணத்தை தயார் செய்து தொழில் தொடங்கலாம் என்று யோசிப்பதில் தவறு எதுவும் இல்லை.
ஆனால் அடிப்படை தேவைகள் அனைத்தும் இருந்தும் பலர் யோசித்துக் கொண்டே இருப்பார்கள் கடைசிவரை தொடங்க மாட்டார்கள்.
      அவர்கள் இரண்டு மூன்று வருடத்திற்கு பின்பு இப்படி யோசிப்பார்கள் அன்றே அந்த தொழிலை தொடங்கி இருந்திருக்கலாம் என்று இது போன்ற தவறுகளை நீங்களும் செய்யாதீர்கள்.
யோசனை செய்து விரைவாக முடிவுகளை எடுங்கள்.

         நாம் எப்பொழுதும் யோசனை  செய்து முடிவுகளை எடுக்க ஒன்றில் இருந்து மூன்று நாட்கள் மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு அதிகமாக யோசனை செய்யக்கூடாது முடிவுகளை எடுத்து விட வேண்டும் அப்படி யோசனை செய்தால் .அது நம் மனதிற்கும் உடல் நலத்திற்கும் கேடு.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை உடனே முடிவு எடுக்க வேண்டும்.

உதாரணமாக :
      ஒரு தொழில் தொடங்கலாம் என்று நினைத்தால் அந்த தொழிலில் வரும் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளும் அளவிற்கு நம்மிடையே உடலளவிலும் மனதளவிலும் சக்தி இருக்கா என்று பார்க்க வேண்டும்.
சில சமயங்களில் நாம் அந்த தொழிலில் வெற்றி அடைவோம் அல்லது தோல்வி அடைவோம்.    
      வெற்றி அடைந்தால் பெற்றுக்கொள்.தோல்வி அடைந்தால் அதிலிருந்து கற்றுக்கொள்!!
     அந்த மனதை நமக்குள் நாம் கொண்டு வந்தால் எந்த ஒரு நிலையிலும் நாம் சோர்வடைய மாட்டோம்.
        யோசனையை குறைத்து செயலில் மாற்றத்தை கொண்டு வந்து ஜெயித்து காட்டுவோம்...


வாழ்த்துக்கள் நண்பர்களே....!!

இது போன்ற நல்ல நல்ல பதிவுகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

Red Taxi-யில் காரை எப்படி Booking செய்வது🤔

ஈஷா யோகா மையம்

RCH ID Registration கர்ப்பிணி பெண்கள் முதல்ல இதைத்தான் செய்ய வேண்டும்